100 சதவீதம் பொய் சொல்லும் சிம்புவின் தாயார்..! இது தான் உண்மை பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன்..!

Published : Aug 15, 2021, 05:20 PM IST
100 சதவீதம் பொய் சொல்லும் சிம்புவின் தாயார்..! இது தான் உண்மை பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன்..!

சுருக்கம்

நடிகர் சிம்பு படங்கள் என்றாலே பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதில்லை, அந்த வகையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.   

நடிகர் சிம்பு படங்கள் என்றாலே பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதில்லை, அந்த வகையில் தற்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம்  மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது. 

இந்த பிரச்சனை குறித்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்த, சிம்புவின் தாயார் உஷா டி.ராஜேந்தர்... "இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைக்கில் ராயப்பன் தயாரிப்பில் கடந்த, 2017 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான 'AAA ' திரைப்படத்திற்கு, சிம்பு சம்பளமே வாங்கவில்லை என்றும், இந்த படம் தோல்வியை சந்தித்ததால், தனக்கு சம்பளம் பெறாமல் சிம்பு மற்றொரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என மைக்கல் ராயப்பன் கூறியதாகவும், மீறும் பட்சத்தில் சிம்புவின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது அவருக்கு சுமார் 2 கோடி வரை கப்பம் கட்ட வேண்டும் என கூறியதாக தெரிவித்திருந்தார். 

சிம்பு மீது துளியும் தவறில்லை என்றும், உஷா டி.ராஜேந்தருக்கு தற்போது 'AAA ' படத்தின் தயாரிப்பாளர் மைக்கல்  ராயப்பன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிக்கு இவர் கொடுத்துள்ள பேட்டியில், "சிம்புவுக்கு ரூபாய் 3.50 கோடி சம்பள பாக்கி தர வேண்டும் என்றும் குற்றம் சாட்டி இருந்தார் அவரது தாயார், அந்த தகவல் 100% பொய் என்றும், அவருக்கு 75 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்".

சிம்பு தனக்கு ஒரு திரைப்படம் நடித்து தருவதாக கூறி இருந்தார், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் போது அந்த 75 லட்சம் ரூபாயை நான் தருவதாக கூறி தெரிவித்தேன், ஆனால் அவர் இதுவரை தனக்கு எந்த ஒரு ஒப்பந்ததமும் கொடுக்காததால் நான் இதுவரை அந்த பணத்தை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிலுக்கு சிம்பு தரப்பில் இருந்து எந்த மாதிரியான பதில் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்