சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள 10 தல திரைப்படம் வெற்றி பெற வேண்டி புதுச்சேரி சிம்பு ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் கறி விருந்து அளித்தனர்.
சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 10 தல. இப்படம் வருகின்ற 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் திரைப்படம் வெற்றிபெற புதுச்சேரி சிம்பு ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் படம் வெளியாகவுள்ள திரையரங்குகள் முன்பாக பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக 10 தல படம் வெற்றி பெற வாழ்த்தி புதுவை சிம்பு தலைமை மன்றத்தின் ஆதரவோடு காலாபட்டில் உள்ள தம் லிட்டில் சிம்பு ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக சினேகா முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு பிரியாணி, முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டது.
புதுவையில் சிறுமி கற்பழித்து கொலை; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் வேல்ராஜ், ரமேஷ், தண்டபாணி, கோவிந்து,என நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் படம் வெளியாகும் தினத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்ளிட்ட பொருட்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தினம் விற்பனை; பக்தர்களுக்கு விபூதி அடித்த போலி சாமியார்