Simbu : நயன்தாராவுக்கு போட்டியாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பை வெளியிடும் சிம்பு.... பரபரப்பாகும் கோலிவுட்

முன்னாள் காதலர்களான நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் தற்போது கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நாயகனாக வலம் வந்த சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் மார்க்கெட் தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

நடிகர் சிம்பு கைவசம் கவுதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, ஒபிலி என் கிருஷ்ணா இயக்கும் ‘பத்து தல’, கோகுல் இயக்கும் கொரோனா குமார் மற்றும் ஹன்சிகாவுடன் மஹா போன்ற படங்கள் உள்ளன. இவ்வாறு படு பிசியான ஹீரோவாக நடித்து வருகிறார் சிம்பு. 

Latest Videos

குறிப்பாக கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்திற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்து நடித்துள்ளார் சிம்பு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததோடு, இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில்,  ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மற்றுமொரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேபோல் நயன்தாரா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அப்டேட்டும் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அதற்கு போட்டியாக தான் சிம்பு இந்த அப்டேட்டை வெளியிட உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

click me!