
நடிப்பு, ஸ்டைல், நடனம், ஆக்ஷன், பாடல் என அனைத்திலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் விஜய். இன்றளவும் அதிக ரசிகர் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ள நடிகர் விஜய். தளபதி என்று அழைக்கப்படும் விஜயின் திரைப்பயணம் 1984-ல் துவங்கியது. குழந்தை நட்ஷத்திரமாக வெற்றி படத்தில் நடித்திருந்தார்.
குழந்தை நட்ஷத்திரமாக பல படங்களில் கலக்கி வந்த விஜய் 1992-ம் ஆண்டில் தனது தந்தையான சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அப்போது அவருக்கு வயது 18. இவர் நடிப்பில் அப்போது வெளிவந்த தேவா. பெரிதும் பேசப்பட்ட படமாக இருந்ததோடு 100 நாட்கள் திரை கண்டு சாதனையும் படைத்திருந்தது. ரொமாண்டிக் ஹீரோவாக 90 களில் அறியப்பட்ட விஜய் பின்னர் ஆக்சன் ஹீரோவாக பரிமானித்தார்.
இவர் நடிப்பில் வெளியான திருமலை, கில்லி, குருவி, உள்ளிட்ட படங்கள் ஆக்சன் ஹீரோவாக இவரை வெளிக்காட்டியது. இதை தொடர்ந்து வெளியான ஜில்லா, துப்பாக்கி, கத்தி, சர்க்கார்.பிகில்,மாஸ்டர், போன்ற படங்கள் விஜய்க்கு மாஸ் வெற்றியை பெற்று தந்தன.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவரின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம், திரையரங்கை திருவிழா போல் மாற்றுவார்கள் விஜய்யின் ரசிகர்கள். இந்நிலையில் நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இன்றோடு 29 வருடங்கள் ஆகின்றன.
விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'பீஸ்ட்' படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் 'தளபதி 66' படத்தில் விஜய் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜயின் 29 -ம் ஆண்டு திரை பயணத்தை "29 years of vijay" என்கிற ஹேஸ் டேக் மூலம் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.