Bigg Boss Julie : கழட்டி விட்ட காதலன் ; காவல்நிலையத்தில் கதறும் பிக் பாஸ் ஜூலி!!

Kanmani P   | Asianet News
Published : Dec 04, 2021, 10:31 AM ISTUpdated : Dec 04, 2021, 12:11 PM IST
Bigg Boss Julie : கழட்டி விட்ட காதலன் ; காவல்நிலையத்தில் கதறும் பிக் பாஸ் ஜூலி!!

சுருக்கம்

BiggBossJulie : பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமான ஜூலி "தன்னையை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக" தனது காதலர் மீது புகார் அளித்துள்ளார்.

ஜல்லிக் கட்டு போராட்டத்தில் குரல் கொடுத்து பிரபலமானார் நர்ஸ் ஜூலி. அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்ட் செய்தது மட்டுமின்றி, பிக்பாஸ் வீடு வரை கொண்டு வந்து சேர்த்தது. செவிலியராக இருந்தபோதும், குறும்படங்களில் நடித்து வந்த ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க வேற லெவலில் பிரபலமானார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு வீரத்தமிழச்சி பெயர் டோட்டலாக காலி ஆகி, அழுகினி ஜூலியாக மாறிவிட்டார். பிக் பாஸிலிருந்து எலிமினேஷன் ஆனா பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய ஜூலி, பின்னர்  படம் ஒன்றில் அம்மன் வேடமிட்டு ரசிகர்களை கடுப்பேத்திரியிருந்த ஜூலி மாடலிங்கில் படு பிஸியாகிவிட்டார். ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு படு வேகமாக சமூகவலைத்தளத்தில் பிரபலமான ஜூலியின் நிர்வாண புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையே விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் சில படங்களில் நாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்பட்டது. 

இந்நிலையில் இன்று ஜூலி தனது காதலர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகாரில்,  மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துக்கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!