Vikram 61: விஜய் நடிக்க மறுத்த கதையை விக்ரமுக்கு சொல்லி ஓகே பண்ணிய பா.இரஞ்சித்.... அது என்ன கதை தெரியுமா?

By Ganesh PerumalFirst Published Dec 3, 2021, 9:57 PM IST
Highlights

மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த பா.இரஞ்சித் அடுத்ததாக விக்ரமின் 61-வது படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதால், தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் ரஜினி. இதைப் பயன்படுத்தி காலா, கபாலி என ரஜினிக்கு அடுத்தடுத்து 2 ஹிட் படங்களை கொடுத்தார் பா.இரஞ்சித்.

இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்றதால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருகிறார் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதையடுத்து அவர் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி விக்ரமின் 61-வது படத்தை அவர் இயக்க உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பா.இரஞ்சித் விக்ரமுக்கு சொன்னது சூப்பர் ஹீரோ கதை என தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இக்கதையை அவர் ஏற்கனவே விஜய்யிடம் கூறியதாகவும், அவர் நடிக்க மறுத்ததால் தற்போது அதனை விக்ரமிடம் சொல்லி ஓகே வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே கந்தசாமி படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!