விலகி செல்லும் தனுஷுக்கு வலியப்போய் வாழ்த்து சொன்ன அனிருத், சிம்பு ...

 
Published : Mar 12, 2017, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
விலகி செல்லும் தனுஷுக்கு வலியப்போய் வாழ்த்து சொன்ன அனிருத், சிம்பு ...

சுருக்கம்

simbu and aniruth wish for dhanush power pandy

நடிப்பு, பாடல், தயாரிப்பு  என பல்வேறு துறைகளிலும் கால்பதித்து வெற்றி வாகை சூடி கோலிவுட்டில் வலம் வரும் தனுஷ் தற்போது 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகம் கொடுக்கிறார்.  

இந்த படத்தின் பாடல்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்  வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷின் முதல் இயக்கம், மற்றும் பாடல்கள் வெற்றிக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய  வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர். 

குறிப்பாக அவரது திரையுலக போட்டியாளரான சிம்பு தனது வாழ்த்துக்களை தனுஷூக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் 'சூரக்காத்து' பாடல் தன்னுடைய பேவரேட் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்போலவே தனுஷ் படத்தில் அறிமுகமாகி இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத்தும் 'பவர்பாண்டி' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆனால் சமீபகாலமாக அனிருத் மேல் ஏதோ கோபத்தில் உள்ள தனுஷ் அவரை விட்டு விலகி சென்றுகொண்டிருக்கிறார் . அறிமுக படுத்தியவரை மறக்காமல் அனிருத் ஒவ்வொரு முறையும் வலிய சென்று வாழ்த்துக்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல் மறைமுகமாக அவரை தாக்கி பேசிய சிம்பு  தனுஷுக்கு பல  நாட்கள் சென்று  மனம் திறந்து பாராட்டியுள்ளார்  என்பதும் குறிப்பிடத்தக்கது .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!