“பொன்மகள் வந்தாள்” படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட பெண் இயக்குநர்... சும்மா தீயாய் இருக்காம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 28, 2020, 6:40 PM IST
Highlights

இந்நிலையில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவை பார்த்த 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் முதல் ஆளாக படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள்.  அறிமுக இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை ஒடிடி தளமான அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆகிறது.நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கும் இப்படத்தில் ஜோதிகா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருப்பதோடு, பாக்யராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் அனைத்து  மூடப்பட்டுள்ளதால் நாளை அமேசான் பிரைமில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஆன்லைன் தளத்தில் படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே சிக்கல் வலுத்தது. இதனிடையே சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியாகி தாறுமாறு வைரலானது. கோடிக்கணக்கான பார்வையாளர்களை கடந்த பொன்மகள் வந்தாள் டிரெய்லர் படத்தின்  மீது அளவில் எதிர்பார்ப்பையும் தந்துவிட்டது.

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

இந்நிலையில் நாளை அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாக இன்று திரைத்துறை பிரபலங்கள் பலரும் அந்த படத்தை கண்டு களித்தனர். ஏற்கனவே பொன்மகள் வந்தாள் டிரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நேர்கொண்ட பார்வை படத்தின் லேடி அஜித் வெர்ஷனை பார்ப்பது போல் உள்ளதாக ஜோதிகாவை புகழ்ந்து தள்ளினர். இதனிடையே இன்று ஜோதிகாவின் நடிப்பை பார்த்த பிரபலங்கள் பலரும் சோசியல் மீடியாவில் ஆகா...ஓஹோ... என பாராட்டி வருகின்றனர். 

இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!

இந்நிலையில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவை பார்த்த 'சில்லுக்கருப்பட்டி' படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் முதல் ஆளாக படத்தை விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், ஆன்லைன் பிரிமியர் ஷோவில் படத்தை பார்த்துவிட்டேன். உணர்ச்சிவசப்பட வைக்கும் கோர்ட் டிராமா. ஜோதிகா மேடம் அவர்களின் நடிப்பு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது மிகவும் முக்கியமான படம். பாதிக்கப்பட்டவர்களை தைரியமாக குரல் கொடுக்க தூண்டுகிறது. அருமையான படம். வாழ்த்துக்கள் பெட்ரிக் அண்ட் டீம் என்று வாழ்த்து கூறியுள்ளார். 

click me!