பார்க்க ரொம்ப ஸ்ட்ரிக்டாக டையட்டை பின்பற்றும் நபர் போல் தெரியும் நயனுக்கு பின்னாடி இப்படியொரு வீக்னஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தமிழ் ரசிகர்கள் மனதில் ராணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் நயன்தாரா. தனது அசத்தல் நடிப்பால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற படத்திற்கு சொந்தக்காரியாக வலம் வருகிறார். டாப் ஹீரோக்களின் படம் என்றாலே பர்ஸ்ட் சாய்ஸ் நயன் தான் என்கிற அளவிற்கு முன்னணி ஹீரோக்களும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கின்றனர். படத்தில் ஹீரோவை உருகி, உருகி காதலிக்கும் ஹீரோயின் கதாபாத்திரங்களை எல்லாம் விட்டுவிட்டு, கதையின் நாயகியாக வலம் வரக்கூடிய படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி என்பார்கள். ஆம்... நயன்தாரா அடுத்தடுத்து சந்தித்த காதல் தோல்விகளும், நம்பிக்கை துரோகமும் தான் இப்படி விஸ்வரூப வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளது. சினிமாவில் நடிக்க வந்த புதிதில் சிம்பு - நயன்தாரா காதலித்து வந்த சங்கதி அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதன் பின்னர் சிம்பு - நயன்தாரா காதல் முறிந்தது.
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, பிரபுதேவா இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்தில் நடித்தார். அப்போது பிரபுதேவாவிற்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. திருமணம் வரை சென்ற அந்த காதல் சில சிக்கல்களால் பிரிவில் முடிந்தது. தற்போது நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் இருப்பது அனைவரும் அறிந்த செய்தி.
இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!
தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக நயன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ள நயன்தாரா. அடுத்ததாக காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்து வரும் நெற்றிக்கண், அவர் இயக்க காத்து வாக்குல இரண்டு காதல் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். சைடு கேப்பில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்திலும் சூப்பர் கேரக்டரில் கமிட்டாகியுள்ளார்.
இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!
இப்படி ஒருநாளைக்கு 24 மணி நேரம் போதாமல் பிசியாக சுற்றி வரும் நயன்தாரா குறித்து சூப்பர் தகவல் ஒன்று கசித்துள்ளது. நயனுக்கு அழகே அவருடைய செழுமையான உடல்வாகு தான், படத்தில் நடிக்க வந்த புதிதில் கொஞ்சம் குண்டாக இருந்த நயன்தாரா அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்ததும் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டு அழகான உடல்வாகிற்கு வந்துவிட்டார்.
இதையும் படிங்க: இளையராஜா மகனை இஸ்லாமிற்கு மாத்திட்டீங்களே?... யுவன் மனைவியை சீண்டிய நெட்டிசன்கள்...!
பார்க்க ரொம்ப ஸ்ட்ரிக்டாக டையட்டை பின்பற்றும் நபர் போல் தெரியும் நயனுக்கு பின்னாடி இப்படியொரு வீக்னஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம்... நயனுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். என்ன தான் ஆடம்பரமான நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட போனாலும் நயனின் பட்டியலில் முதலில் இடம் பிடிப்பது பிரியாணி தானாம். அதுவும் ஐதராபாத் தம் பிரியாணி என்றால் ஒரு கை பார்த்துவிடுவாராம். நயனின் முன்னாள் காதலரான சிம்புவும் பிரியாணி லவ்வர் என்பது கூடுதல் தகவல்.