கண்ணீர் அஞ்சலி... கடுப்பில் நடிகர் சித்தார்த் போட்ட ‘நச்’ பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 02, 2021, 11:01 PM IST
கண்ணீர் அஞ்சலி... கடுப்பில் நடிகர் சித்தார்த் போட்ட ‘நச்’ பதிவு...!

சுருக்கம்

சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

கடந்த ஜூலை மாதம் நடிகர் சித்தார்த் இறந்துவிட்டதாக யூ-டியூப் வீடியோ முகப்பு படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. ரசிகர் ஒருவர் இதுபற்றி நடிகர் சித்தார்த்திடமே கேள்வி கேட்டார். அதற்கு தனது ட்வீட்டில் இந்த வீடியோ குறித்து நான் யூடியூப் சேனலுக்கு ரிப்போர்ட் செய்தேன். அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள். ஆனால் வீடியோவில் எந்தவிதமான தவறும் இல்லை என தெரிவித்தனர். என்னுடயை ரியாக்ஷன் அடபாவி என சித்தார்த் தெரிவித்திருந்தார். 


திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி தொடரான பாலிகா வடு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் இன்று காலை மாரடைப்பால் மும்பையில் காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ