கமலின் தோல்வி குறித்து... ஒற்றை வரியில் ஸ்ருதிஹாசன் போட்ட நச் பதிவு..!

By manimegalai aFirst Published May 3, 2021, 8:36 PM IST
Highlights

இந்தநிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...  தன்னுடைய தந்தை பற்றி ’எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என நச்சுனு ஒரு பதிவை போட்டுள்ளார். 

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவேன் என்று அறிவித்த நாள் முதலே பரபரப்பு பரபரப்பு பற்றி கொண்டது. அதே... தொகுதியில் காங்கிரஸ்-பாஜக-மக்கள் நீதி மய்யம் என்று மும்முனை போட்டி ஏற்பட்டது. என்றாலும் பாஜக வேட்பாளர் வானதிக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. 

காலையில் ஆரம்ப சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், கமல்ஹாசனும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். ஒரு கட்டத்தில் மயூரா ஜெயக்குமார் பின்தங்க, வானதிக்கும் கமலுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மாலை வரை கமல்ஹாசனே தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். எப்படியும் இந்தத் தொகுதியில் கமல் வெற்றி பெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன்  திடீரென முன்னிலைப் பெறத் தொடங்கினார். 

கடைசி சுற்றுகளில் வானதி சீனிவாசன் தொடர்ந்து முன்னிலை பெற, இறுதியில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் மட்டும் வெற்றி பெறுவார் என்று, மக்கள் நீதி மையம் கட்சியை சேர்த்தவர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 1700 வாக்கு வித்தியாசத்தில் அந்த வாய்ப்பும் பறிபோனது.

கமல்ஹாசன் தன்னுடைய தோல்வி குறித்து போட்ட பதிவில்... மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். 'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்...  தன்னுடைய தந்தை பற்றி ’எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்’ என நச்சுனு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட்டை வைத்திருக்கும் புகைப்படம் உள்ளதால், தன்னுடைய அப்பாவின் தேர்தல் தோல்வி குறித்தே... இப்படி ஒரு பதிவை அவர் பதிவு செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

click me!