கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கும் கொரோனா... தனுஷ் பட நடிகைக்கு தொற்று உறுதி!

Published : May 03, 2021, 07:28 PM IST
கோலிவுட் திரையுலகை சுழட்டி அடிக்கும் கொரோனா... தனுஷ் பட நடிகைக்கு தொற்று உறுதி!

சுருக்கம்

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சஷன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அம்பிரமி. இவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.  

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சஷன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அம்பிரமி. இவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 'ராட்சசன்', 'அசுரன்' என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதால் மக்கள் மனதில் பதிந்து விட்டார். தற்போது இவர் ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும்,  இதனையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதை அடுத்து அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமை படுத்துக்கொண்டு, மருத்துவரின் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து அம்மு அபிராமி விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவரா..? மேக்-அப் இல்லாத ஒரிஜினல் சல்மா எப்படி இருப்பார் தெரியுமா..?