
கடந்த 13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கமல் கௌதமி இருவரும் பிரிந்துள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சொந்த வாழ்க்கையில் எப்படி பட்ட பிரச்சனை வந்தாலும், அதையும் பொருட்படுத்தாமல், கலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் கமல்.
தனது சொந்த வாழ்க்கை பற்றி விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என அவ்வப்போது பொது மேடைகளில் கமல் பேசி வந்தாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.
தற்போது கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்புலட்சுமி எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாகவும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு பலருக்கு ஆச்சர்யத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தினாலும் கமலின் நெருங்கிய வட்டாரங்கள் இதனை பல நாட்களுக்கு முன்பே அறிந்தவர்கள்.
ஏற்கனவே வாணி கணபதி மற்றும் சரிகாவை பிரிந்த கமல் தன்னுடன் பல வெற்றி படங்களில் நாயகியாக நடித்த கௌதமியுடன் லிவிங் டூ கெதர் ஆக இருந்து வந்தார்.
தனது தாய் சரிகாவை கமல் பிரிந்தது மிகுந்த வேதனை தந்தாலும் தானும் அக்க்ஷராவும் அதை ஏற்றுக்கொண்டதாக சுருதி மீடியாக்களில் தெரிவித்து வந்தார்.
ஆனால் கமல் கௌதமி பிரிவிற்கு ஸ்ருதி ஒரு முக்கிய காரணமாக அமைத்து விட்டார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கள் இருவரை விட கௌதமி மகள் சுப்புலட்சுமி மீது, கமல் அதிக பாசம் வைத்தது ஸ்ருதியை கோபப்படுத்தி இருக்கலாம் என்றும், இதன் விளைவே கமல் கௌதமி பிரிய காரணமாக இருக்கும் என ஒரு தரப்பினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.