மத்திய அரசு விருது பெரும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்.....!!!

 
Published : Nov 02, 2016, 03:47 AM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
மத்திய அரசு விருது பெரும் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம்.....!!!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் தன் இனிமையான குரல் வளத்தால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்  எஸ். பி. பாலசுப்ரமணியம்.

இவர் ரஜினி, கமல், அஜித், விக்ரம், போன்ற கோலிவுட் முன்னனி நாயகர்களுக்கு, பாலிவுட்டில் சல்மான் கான் போன்ற பல முன்னனி நாயகர்களுக்கு பாடல் பாடியுள்ளார் .

பாடல் மட்டும் இல்லது ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து நடிகராகவும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் .

இவர் மூத்த இசையமைப்பாளர் ஆனா   தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார்.
அதே போல் இசையில்  மிகப்பெரிய வெற்றி கண்ட  ஏ. ஆர். ரகுமான் இசையிலும்   பாடல்கள் பாடியுள்ளார்.

மேலும் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ்,டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார் போன்றோரின் இசையமைப்பில் பாடி இருக்கிறார்.

இவரின் திறமைக்கு வெளிப்படுத்தும் வகையில்  நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 

மேலும் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது . 

எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 

இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. 

பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். 

இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். 

இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். 

மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

தற்போது மேலும் அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் மத்தியஅரசு இவருக்கு இந்தியாவின் சிறப்பு பிரமுகர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த விருது 47வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கபடும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நியூஸ் பாஸ்ட் சார்பாக எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!