
தமிழ் சினிமாவில் படத்துக்கு படம் கெட் அப்பில் மட்டும் இல்லாமல் தன்னையே உருக்கி வித்தியாசப்படுத்தி காட்டுபவர் நடிகர் விக்ரம்.
இவர் அதிக ஜிம் பிரியர், என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். இவருடைய ஜிம் ட்ரைனர் பரத் ராஜ் சமீபத்தில்விக்ரமை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார்.
அப்போது அவர் கூறுகையில் அவருடைய தன்னம்பிக்கைக்கு யாரும் ஈடு கொடுக்க முடியாது எனவும்.
பொதுவாக ஒருத்தருக்கு வெயிட் குறைக்க வேண்டும் என்றால் லெக் ஒர்கவுட் அதிகம் செய்ய வேண்டும்.
ஆனால் விக்ரமால், லெக் ஒர்கவுட் பண்ண முடியாது, காரணம் பாதி கால் தான் அவருக்கு மடங்கும்.
அவருக்கு ஆரம்ப காலத்தில் காலில் பெரிய காயம் ஏற்பட்டது, ஒரு பைக் விபத்தில் அவருடைய காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
ஆனால் அதையெல்லாம் அவருடைய தன்னம்பிக்கை மூலம் அவர் அனைத்தையும் கடந்து வந்தவர் விக்ரம் என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.