
கோலிவுட் போலவே பாலிவுட்டிலும் பல ரசிகர்கள் தங்கள்ளுக்கு பிடித்த நாயகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று கேட்டிருப்போம். ஆனால் அப்படி ஒரு நிகழ்வை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
ஹிந்தியில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா ஷர்மா என பலர் நடிக்க தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி இருந்த படம் 'ஏ தில் ஹை முஷ்கில்'. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்திருப்பார்.
இந்நிலையில் 'மலிகான்' என்ற இடத்தில் தியேட்டரில் ஒன்றில் ரசிகர்கள் ஷாருக்கான் என்ட்ரியை கொண்டாடும் விதமாக தியேட்டரிலேயே வெடி வைத்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளனர்.
இதனை பார்த்த நடிகர் சித்தார்த் ஷாருகான் ரசிகர்கள் மீது தனது கோபத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டுள்ளது, இவ்வளவு ஆழமாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். அப்படி செய்வது அசிங்கமாக தெரியவில்லையா? என செம ரெய்டு விட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.