நிபுணன் வெற்றி குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹரிஹரன்...

 
Published : Aug 04, 2017, 06:12 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
நிபுணன் வெற்றி குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹரிஹரன்...

சுருக்கம்

shruthi hariharan talking about nibunan movie

மக்களால் ஏற்கப்பட்டு வெற்றி பெற்ற படங்கள் அதில் பணிபுரிந்த நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல வாய்ப்புகளை பெற்று தரும். சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் 150வது படமான 'நிபுணன்' படத்தில் அவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெரும் பாராட்டு பெற்றுள்ளனர். 

அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதி ஹரிஹரன்.  'நிபுணன்' குறித்து ஸ்ருதி ஹரிஹரன் பேசுகையில், '''நிபுணன்' படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

அர்ஜுன் சாருடன் பணிபுரிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் பெண்ணான எனக்கு 'நிபுணன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியை கண்டதில் எனக்கு பெருமை. இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் அன்பான மனைவியாக, அவருக்கு நேரிடும் தொழில் சார்ந்த நெருக்கடிகளையும் உடல்நலம் சார்ந்த திடீர் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் கதாபாத்திரம் எனக்கு சவாலாகவும் இருந்தது. 

அதனை திறம்பட செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒரு action படத்தின் நடுவே இழையோடும் குடும்ப கதை , பெண்  ரசிகர்கள் இடையே நிபுணன் படத்தின் வெற்றியை உறுதியாக்கியது. எங்களது 'நிபுணன்' குழுவின் அசுர உழைப்புக்கு கிடைத்துள்ள தகுந்த வெற்றியாக இந்த வெற்றியை கருதுகிறோம்'' எனக்கூறினார் ஸ்ருதி ஹரிஹரன். இவர் தற்பொழுது துல்கர் சல்மான் நடிப்பில் பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சோலோ' படத்தில் நான்கு கதாநாயகளில் ஒருவராக துல்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்