Breaking : சினிமா படப்பிடிப்பு தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது..!

By manimegalai aFirst Published Aug 23, 2020, 12:58 PM IST
Highlights

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து, தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்குவதற்கான, மத்திய அரசின் வழிகாட்டுதல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
 

கொரோனா பிரச்சனை காரணமாக அணைத்து, தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்குவதற்கான, மத்திய அரசின் வழிகாட்டுதல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கிட்ட தட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக கொரோனா பிரச்சனை காரணமாக, அணைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு, சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது. இதை தொடர்ந்து வெள்ளித்திரை படப்பிடிப்புகள் துவங்குவதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, படப்பிடிப்பின் போது, நடிகர் - நடிகை தவிர அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். உடை உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் உபகரணங்களை கையாளும், கலைஞர்கள் கட்டாயம் கை உரை அணியவேண்டும் என்பது போன்ற பல நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிப்புற படப்பிடிப்புகள் நடைபெறும் போது... கூட்டம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும், 6 அடி தூரத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி நடிக்க வேண்டும். கண்டிப்பாக படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடிக்கடி கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மத்திய அரசு சார்பில் திரைப்பட படப்பிடிப்பு குறித்து வழிகாட்டுதல் வெளியிட்டாலும்.... இதனை அந்தந்த மாநில அரசுகள் தான் எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!