பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து தள்ளப்பட்டாரா சுஷாந்த் முன்னாள் பெண் மேனேஜர்?... நடந்தது என்ன?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 11, 2020, 08:40 PM IST
பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து தள்ளப்பட்டாரா சுஷாந்த் முன்னாள் பெண் மேனேஜர்?... நடந்தது என்ன?

சுருக்கம்

இந்நிலையில் திஷாவின் உடலை 2 நாட்கள் கழித்து பிரேத பரிசோதனை செய்தது ஏன் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் மேனேஜரான திஷா சாலியன், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருடைய வருங்கால கணவரும் உடன் இருந்தார். இதையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த், ஜூன் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது தற்கொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? என பேச்சு அடிபட ஆரம்பித்தது. 

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட திஷா சாலியன் வயிற்றில் நடிகர் சூரஜின் குழந்தை வளர்ந்து வந்ததாகவும்,  அவரை சுஷாந்த் பாதுகாத்ததால் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் கொடுத்த சூரஜ், திஷா யாரென்றே தெரியாது என்றும், தனக்கும் சுஷாந்துக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்தார். அத்துடன் அந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

இதையடுத்து திஷா நிர்வாணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகவும் பேசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திஷாவின் பெற்றோர், தங்களுடைய மகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றும், அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். 

இந்நிலையில் திஷாவின் உடலை 2 நாட்கள் கழித்து பிரேத பரிசோதனை செய்தது ஏன் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதாவது திஷாவிற்கு கொரோனா தொற்று இருந்ததா? என்பதை கண்டறிய 48 மணி நேரம் தேவைப்பட்டதாகவும், அதன் பின்னரே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் திஷா மாடியில் இருந்து குதிக்கும் போது ஆடையுடன் தான் குதித்தார் என்றும், உடல் காயங்களை பரிசோதிப்பதற்காக மருத்துவமனையில் இருந்து ஆடை நீக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதால் ஆடை அணிவிக்கவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!