
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படங்களுக்கு இந்தியா அளவில் நல்ல வரவேற்பும், அங்கீகாரமும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஒரு நடிகரின் மார்க்கெட் வளர, வளர அவர்களுடைய ரசிகர்கள் வைத்திருக்கும் வெறித்தனமான அன்பும் வேற லெவலுக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மற்ற நடிகர்களை போட்டியாக பாவித்து சோசியல் மீடியாவில் சண்டையை ஆரம்பித்து விடுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மெகா ஸ்டார் சிரஞ்சீவியே கடுப்பாகும் அளவிற்கு தெலுங்கு மற்றும் தமிழ் டாப் ஸ்டார்களின் ரசிகர்கள் கேவலமாக ட்விட்டரில் கட்டி உருண்டனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபுவின் 45வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். உலக அளவில் ட்ரெண்டான #HBDMaheshBabu என்ற ஹேஷ்டேக் டேக்கில் 24 மணி நேரத்தில் 27.3 மில்லியன் ட்விட்கள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்தமாக 60.2 மில்லியன் ட்விட்கள் பதிவாகி உலக அளவில் சாதனை படைத்துள்ளன.
தளபதி விஜய் பிறந்த நாளின் போது உருவாக்கப்பட்ட #HBDThalapathyVIJAY என்ற ஹேஷ்டாக்கில் 24 மணி நேரத்தில் 10.5 மில்லியன் ட்வீட் செய்திருந்தனர். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் இது 9 மில்லியன் ட்வீட்களை மட்டுமே பெற்றது. விஜய், அஜித்தை விட பல மடங்கு அதிகம் ட்வீட்களை செய்து மகேஷ் பாபுவின் பிறந்தநாள் ஹேஷ்டேக் பட்டையைக் கிளப்பியுள்ளது தல, தளபதி ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.