ரஜினி மீது ரசிகர் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!

Published : Feb 15, 2021, 03:03 PM IST
ரஜினி மீது ரசிகர் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.எஸ் .ராஜன் பகீர் குற்றச் சாட்டை ஒன்றை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளர் ஆர்.எஸ் .ராஜன் பகீர் குற்றச் சாட்டை ஒன்றை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என சந்தேகத்திலேயே இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக,  திடீரென தான் அரசியலுக்கு வருவது உறுதி என்கிற அறிவிப்பை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்.  இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்தார்.

இதையடுத்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் அவர் அரசியலுக்கு வரும் நாளை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், திடீரென தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். இதனால் மனமுடைந்த ரசிகர்கள் பலர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் பெண்கள் என அனைவரும், அரசியலுக்கு ரஜினியை கண்ணீர் விட்டு அழைத்தனர்.

மேலும் ரஜினி ரசிகர்கள் ஒன்றாகக்கூடி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மிகப்பெரிய அறப்போராட்டம் செய்தனர். ஆனால் ரஜினி மீண்டும்  அரசியல் குறித்து எடுத்த முடிவை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை.

இந்நிலையில் சமீபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் உள்ளிட்ட சிலர் ரஜினி மக்கள் மன்றத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக நடந்து கொண்டதாக  காரணம் காட்டி நீக்கப்பட்டனர். 

இதைத்தொடர்ந்து, தற்போது ஆர்.எஸ். ராஜன் ரஜினி மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் 1986 ரஜினி ரசிகர் மன்றத்தில் தான் இருப்பதாகவும், ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியானதால் காங்கிரஸில் தான் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 'எந்திரன்' படத்தை 800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக, ரஜினி தந்திரமாக அரசியல் கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்றும், அவர் தன்னை மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றி உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆதி குணசேகரனுக்கு ஆட்டம் காட்டும் அப்பத்தா.. அறிவுக்கரசி எடுக்கும் எதிர்பாரா முடிவு - களம் மாறும் எதிர்நீச்சல்
லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?