வில்லனாக 'ருத்ர தாண்டவம்' ஆட வரும் கெளதம் மேனன்..!

By manimegalai aFirst Published Feb 15, 2021, 12:55 PM IST
Highlights

'காக்க காக்க', 'விண்ணைத்தாண்டி வருவாயா', போன்ற நெஞ்சைத் தொடும் காதல், ஆக்ஷன், காமெடி என அணைத்து அம்சங்களும் கலந்த படங்களை இயக்கி ரசிகர்களின் ஆஸ்தான இயக்குனர் என பெயர் எடுத்த கௌதம் மேனன் தற்போது வில்லனாக நடிக்க உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

'காக்க காக்க', 'விண்ணைத்தாண்டி வருவாயா', போன்ற நெஞ்சைத் தொடும் காதல், ஆக்ஷன், காமெடி என அணைத்து அம்சங்களும் கலந்த படங்களை இயக்கி ரசிகர்களின் ஆஸ்தான இயக்குனர் என பெயர் எடுத்த கௌதம் மேனன் தற்போது வில்லனாக நடிக்க உள்ள தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் சமீப காலங்களாக இயக்குனர் என்பதைத் தாண்டி, தயாரிப்பாளர், நடிகர், என திரையுலகில் தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, தற்போது திரைப்பட இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கவுள்ள ருத்ர தாண்டவம் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கிரவுட் ஃபண்டிங் மூலம் மோகன்.ஜி  இயக்கிய திரௌபதி திரைப்படம் மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, அதிக லாபம் ஈட்டிய படம் என்கிற பெருமையைப் பெற்றது. மேலும் இந்த படத்தின் கதைக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார் மோகன் ஜி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட்,  தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு 'ருத்ர தாண்டவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், மாலை 6 மணியளவில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியானது.

அதன்படி தற்போது 'ருத்ர தாண்டவம்' படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக மிரட்ட உள்ளார் என்பதை, படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல்முறையாக வில்லனாக கெளதம் மேனன் நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

click me!