
கோலிவுட்டின் முக்கிய காதல் ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. 'ராக்கி', 'கூழாங்கல்' மற்றும் 'நெற்றிக்கண்' ஆகியப் படங்களை தயாரித்திருக்கிறார்கள். அதோடு செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தையும் தயாரித்திருக்கிறார்கள்.
விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் பிப்ரவரி 14ம் தேதி அன்று வெளியாகும் என விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இசையமைப்பாளர் அனிருத்திற்கு இது 25வது படம் என்பதாலும், காதலர் தினத்தில் முதல் பாடலை வெளியிட உள்ளதாலும் காதலர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என காத்திருந்தனர்.
அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் உருவாகியிருக்கும் இரண்டு காதல் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலின் ஆரம்பத்திலேயே சார் எல்லாருக்கும் ஒரு ஹார்ட் தானே சார். எனக்கு மட்டும் ரெண்டு ஹார்ட் சார். ஒரு லவ் பெயிலியரையே தாங்க முடியாது.. எனக்கு ஒரே நேரத்தில் ரெண்டு லவ் பெயிலியர் சார் என சோகமான மியூசிக் உடன் பாடல் ஆரம்பிக்கிறது. இசையும், பாடலும் நன்றாக இருந்தாலும் காதலர் தினத்தில் லவ் பெயிலியர் சாங்கை ஏன் வெளியிட்டீங்க விக்கி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.