“காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு”... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 14, 2021, 06:44 PM IST
“காதலை தவிர கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு”... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு...!

சுருக்கம்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதல் கணவர் பிரபாவைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா வெளியிட்டுள்ள நீண்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக அறியப்பட்ட அனிதா சம்பத். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் அனிதாவிற்கு சப்போர்ட் செய்த பலரும் நாட்கள் செல்ல, செல்ல அவரை சோசியல் மீடியாவில் விமர்சிக்க ஆரம்பித்தனர். அப்படி ஒவ்வொரு முறை மீம்ஸ், ட்ரோல் என அனிதாவை விமர்சித்த அனைவருக்கும் நெத்தியடி பதிலடி கொடுத்து வந்தார் காதல் கணவர் பிரபா. கிட்டதட்ட 80 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த அனிதாவும், தன்னுடைய கணவன் பிரபாவைப் பற்றியும், தங்களுக்கிடையேயான காதல் பற்றியும் பேசாத நாளே கிடையாது. 

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதல் கணவர் பிரபாவைப் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா வெளியிட்டுள்ள நீண்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில், “எல்லா மாசமும் 25ஆம் தேதிய தான் காதலர் தினம் போல எண்ணுவோம்..feb14 மேல அவ்ளோ ஈடுபாடு இல்ல..அதுவும் இந்த வருடம் 25ஆம் தேதினு தெரிஞ்சும் வாழ்த்திக்கிற நார்மல் நிலைக்கு இன்னும் வரல..எனினும் உனக்கு காதலர் தின வாழ்த்துகளும் நிறைய காதலும் பப்பு... உள்ள போனா என்ன நடக்கும்னு உனக்கு தெரியாம இல்ல.. தெரிஞ்சும் என் ஆசைக்காக என்ன தடுக்காம அனுப்பின...

கணவன்ங்கிற ஒரே காரணத்தால உன்னையும் சேர்த்து காயப்படுத்துன அத்தனை விமர்சனங்களையும் தாங்கிக்கிட்டு,சில விமர்சனத்துக்கு பதிலடியும் கொடுத்து,எனக்காக நான் வெளிய வந்த அப்புறமும் புன்னகையையும் காதலையும் தவிற வேற எதையுமே காட்டிக்காம,வெளிய வந்த உடனே எனக்கு நடந்த இன்னொரு இடியையும் என் கூடவே தாங்கிகிட்டு,உன் வீட்டு சிரமத்தையும் தாங்கிகிட்டு,இன்னக்கி வரைக்கும் என்ன சிரிக்க வைக்க மட்டுமே ஒரு ஒரு நாளும் முயற்சி எடுக்குற உனக்கு என்ன கைமாறு செய்ய போறேனு தெரியல..! காதலை தவிற கொடுக்க என்கிட்ட ஏதும் இல்ல பப்பு...

காலம் எல்லாவற்றையும் மாற்றும் பப்பு..நம்ம கண்ட கனவெல்லாம் விரைவில் நெனவாகும்... அதுக்காக ஒருத்தர இன்னொருத்தர் கீழ விழும் போதெல்லாம் தூக்கி விட்டுக்குட்டு இதே மாதிரி கனவ நோக்கி பயணிப்போம்... உன் நேசிப்பு தான் என் ஆகப்பெரிய பெருமை..சொத்து..எல்லாம்..லவ் யூ பப்பு! காதலர் தின நல்வாழ்த்துகள்!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெக்கார்டு பிரேக்கிங் வசூல்... பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?
பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்... பார்வதி - கம்ருதீன் ஜோடியாக எலிமினேட் ஆகப்போறாங்களா?