விடாமல் துரத்தும் அதிர்ச்சி.... பிரம்மாண்ட இயக்குநரைத் தொடர்ந்து இளம் இயக்குநருக்கு கொரோனா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 13, 2020, 08:08 PM IST
விடாமல் துரத்தும் அதிர்ச்சி.... பிரம்மாண்ட இயக்குநரைத் தொடர்ந்து இளம் இயக்குநருக்கு கொரோனா...!

சுருக்கம்

இந்த நல்ல செய்தியை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் தெலுங்கு திரையுலகில் இளம் இயக்குநருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே வெளியிட்டுள்ள தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏழை, பணக்காரன், என எந்த ஒரு பேதமும் இல்லாமல் அனைவரையும் பீதியடைய வைத்து, மொத்த உலக மக்களையும் அச்சுறுத்தி வரும், கொரோனா வைரஸால், பல பிரபலங்கள் தொடந்து, பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் “பாகுபலி” என்கிற படத்தை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகினரையும், தென்னிந்திய சினிமாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ராஜ மௌலி மற்றும் அவருடை குடும்பத்தை சேர்த்தவர்களுக்கு கடந்த காதம் 29 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

ராஜமௌலியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்தெரிவித்திருந்தார். இதையடுத்து இவர்கள், வீட்டிலேயே தங்களை தனிமை படுத்தி கொண்டு, மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி உரிய சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இவர் உட்பட இவருடைய குடும்பத்தினர் அனைவரும் கொரோனாவில், இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாகவாது... “இரண்டு வாரம் தனிமையில் இருந்த நாட்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது எந்த அறிகுறியம் இல்லை. டெஸ்ட் எடுத்து பார்த்ததில், எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை (கொரோனா நெகட்டிவ்) என தெரிய வந்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிஸ் உடலில் உருவாகியிருக்கிறதா என்பதைப் பார்க்க மருத்துவர் 3 வார காலம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்.” இவ்வாறு ராஜமவுலி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த நல்ல செய்தியை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் தெலுங்கு திரையுலகில் இளம் இயக்குநருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே வெளியிட்டுள்ள தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'ஆர்எக்ஸ் 100' பட இயக்குநர் அஜய் பூபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள அவர், 'விரைவில் குணமாகி பிளாஸ்மா சிகிச்சை செய்வேன்' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!