
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, விஷால் இருவரும் உயிருக்கு உயிரான நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. பிட்னஸ் மீது கொள்ளை ஆர்வம் கொண்ட ஆர்யா சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது என கடுமையான ஒர்கவுட்களை செய்கிறார். ஆர்யாவின் சைக்கிள் ஓட்டும் பழக்கைத்தை அவருடைய நண்பர்களான விஷால், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் பின்பற்றுகின்றனர். தற்போது லாக்டவுன் காரணமாக ஜிம் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் நடிகர்கள் தங்களது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வந்தனர்.
தற்போது சென்னையில் 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஜிம்கள் திறக்கப்பட்டுள்ளன. ஜிம்மை திறந்த உடனேயே முதல் ஆளாக ஆஜரான ஆர்யா, கூடவே கொரோனாவில் இருந்து குணமான விஷாலையும் கூட்டிக்கொண்டு போயுள்ளார். இருவரும் ஜிம்மில் நின்று விதவிதமாக எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.
இதைப் பார்த்த விஷால் ரசிகர்கள் ஆர்யாவை திட்டி தீர்க்க ஆரம்பித்தனர். கொரோனாவில் இருந்து குணமாகி சிறிது நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆர்யா கூப்பிட்டாருன்னு ஜிம்முக்கு ஏன்னா வந்தீங்க என உரிமையுடன் கேள்வி கேட்டனர். அதுமட்டுமின்றி அந்த போட்டோவில் விஷாலின் ஒரு கண் ஏதோ பாதிக்கப்பட்டுள்ளதால் தெரிகிறது. இதனால் பதறிப்போன ரசிகர்கள் விஉஷால் அண்ணா கண்ணு ஏன் அப்படியிருக்கு?,. உங்களுக்கு என்ன அண்ணா ஆச்சு? என அக்கறையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.