
தளபதி விஜய்யின் ரசிகர்கள், கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கடந்த நான்கு மாதமாக வேலையும், வருமானமும் இன்றி தவித்து வரும் திரையரங்கு ஊழியர்களுக்கு உதவி செய்து பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளனர்.
திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் எப்படி, லாக் டவுன் போடப்பட்டதில் இருந்து, வேலை, வருமானம் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார்களோ, அதே போல் திரையரங்குகளில் பல்வேரு வேலை செய்து தங்களுடைய பிழைப்பை நடத்தி வந்த தொழிலாளர்கள் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலையை கண்ட விருத்தாச்சலம் தளபதி விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள், லாக் டவுன் காரணமாக வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட திரையரங்கு தொழிலாளர்களுக்கு உதவ நினைத்து, விருத்தாசலத்தில் உள்ள அணைத்து திரையரங்கு தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான, மளிகை பொருட்களை வழங்கியுள்ளனர்.
மேலும் இந்த விழாவின் போது, அனைவருக்கு பிரியாணி விருந்து கொடுத்தனர். இதற்க்கு ரசிகர்கள் மற்றும் பலர் இந்த நற்காரியத்தை செய்த அனைவரையும் மனதார பாராட்டி வருகிறார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.