கொரோனாவிலிருந்து இருந்த போராடி மீண்ட நடிகை... குடும்பத்தினருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி....!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 5, 2020, 5:50 PM IST
Highlights

இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நேற்று மொஹீனா குமாரி சிங் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

பாலிவுட்டில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்தவர் மொஹீனா குமாரி சிங். அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஃபியார் ஃபைல்ஸ், சில்சிலா பியார் கா, பியார் துனே க்யா கியா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக ஆரம்பத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: ஒரே ஒரு போன் கால்.... வெளவெளத்து போன ரஜினிகாந்த்... இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்த கதை தெரியுமா?

தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் மொஹீனா குமாரி சிங், டேராடூனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மொஹீனாவின் மாமியாருக்கு முதலில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை மொஹீனா குமாரி சிங், கணவர் சுரேஷ், மாமனாரும் உத்தரகண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான சத்ய பால் மகராஜ் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் 7 பேரும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். 

 

இதையும் படிங்க: 

மருத்துவமனையில் இருந்த போது மொஹீனா குமாரி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றிய போதும் எங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது எனக்கூறியிருந்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மொஹீனா குமாரி சிங், குடும்பத்தினருடன் வீடு திரும்பினார். 

 

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாரா அடிக்கும் லூட்டி... வைரலாகும் வீடியோ...!

இந்நிலையில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் நேற்று மொஹீனா குமாரி சிங் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வழியாக ஒரு மாதம் கழித்து எங்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவு நெகட்டிவாக வந்துள்ளது. எங்களுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் அற்புதமான மருத்துவ ஊழியர்களை சந்தித்தேன். நேர்மை, கடுமையாக உழைக்கும் மருத்துவர்களுக்கு நன்றி என நீண்ட பதிவை குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவை போட்ட சில மணி நேரங்களிலேயே அவரது சகோதரர் திவ்யராஜ் சிங்கிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

click me!