பிரபல மாஸ் ஹீரோ கொரோனாவால் பாதிப்பு! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்!

Published : May 11, 2021, 11:12 AM IST
பிரபல மாஸ் ஹீரோ கொரோனாவால் பாதிப்பு! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்!

சுருக்கம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் பிரபல மாஸ் ஹீரோ தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் பிரபல மாஸ் ஹீரோ தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடும் போடும் பணி ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே போகிறது. கொரோனாவின் முதல் அலையை விட, இரண்டாவது அலையின் தீவிரம் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு தற்போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் வாதிகள் , குழந்தைகள் என, கொரோனா தொற்றால் பலர் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது... தெலுங்கு திரையுலகின் பிரபல மாஸ் நடிகராக வலம் வரும், ஜூனியர் என்.டி.ஆர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ளதாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில்..  "நான் கோவிட் 19 பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நான் நலமாக இருக்கிறேன். என் குடும்பத்தினரிடம் இருந்து தனிமை படுத்தப்பட்டுள்ளேன். மேலும் மருத்துவர்களின் அறிவுறுத்தியுள்ள அனைத்து நெறிமுறைகளையும் பின் பற்றி வருகிறேன். அதே போல் கடந்த சில தினங்களாக தன்னிடம் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் ".

தற்போது ஜூனியர் என்.டி.ஆர், பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பான் இந்தியா படமாக உருவாகி வரும், 'RRR ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ராம் சரண் தேஜாவுடன் இணைந்து நடித்து வருகிறார். கொரோனாவின் முதல் அலையில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலையில் டோலிவுட் திரையுலகின் மாஸ் ஹீரோ பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்