காட்டிக்கொடுத்த பார்த்திபன்! பொன்னியின் செல்வன் இன்கம் ரெய்டு மேட்டரை கூறி பகீர் கிளப்பிய பயில்வான்!

By manimegalai a  |  First Published Jun 17, 2023, 10:05 PM IST

நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள 'யோக்கியன்' படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
 


மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி, சாய் பிரபா மீனா என்பவர் இயக்கி யுள்ளார். இந்த படத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் ஆடியோ , டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு சங்க தலைவர் ஆர்.கே.அன்பு செல்வன், இயக்குனர்கள் லியாகத் அலிகான், செந்தில் நாதன்,  நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை அக்ஷயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tap to resize

Latest Videos

உதவி செய்வதை கூட இப்படி நினைத்தால்... விஜய்க்கு அனுதாபங்கள்! வைகை செல்வன் பரபரப்பு ட்வீட்!

இந்த விழாவில் பேசிய சர்ச்சை நடிகரான பயில்வான் ரங்கநாதன், "ஜெய் ஆகாஷ் நடித்தி ருக்கும் யோக்கியன் வெற்றி பெற வாழ்த்துக்கள். சினிமாவை பொறுத்தவரை மற்ற மாநில சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா துறை நன்றாக இல்லை. தயாரிப்பாளர் சங்கங்கள், நடிகர் சங்கம் என எந்த சங்கமும் தயாரிப்பாளர்களுக்கு உதவவில்லை. சினிமாவில் தற்போது புதிய சர்ச்சை நிலவுகிறது. என் படத்தை காப்பி அடித்துவிட்டார்கள்  என்று பிரச்சனையை கிளப்புகிறார்கள்.

படிப்பது மட்டும் முழுமையான கல்வி இல்லை! குட்டி ஸ்டோரி மூலம் இரண்டு விஷயங்களை கூறிய தளபதி விஜய்!
 
தமிழ் சினிமா ஒன்றாக இல்லை பிரிந்து கிடக்கிறது . ஒரு படம் ஓடினால் அவனே காட்டிக்கொடுக்கிறான்.  பார்த்திபன் சொல்லித்தான் பொன்னியின் செல்வனுக்கு இன்கம் டேக்ஸ் ரெய்டு வந்தது.  படம் ஓடினால் இன்கம்டேக்ஸ் வந்துவிடுகிறது. ஓடாவிட்டால் வட்டிக்காரன் வந்துவிடுகிறான். திரையுலகினர் ஒட்டுமொத்தமாக சென்று சிறுபட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுங்கள் என்று முதலமைச்சரிடம்  கேட்டால் நிச்சயம் தருவார். இதை தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார்.  இவர் பேசியதில் அந்த பார்த்திபன் மேட்டர் தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நெகட்டிவ் விமர்சனங்களை நீக்க 5500 முதல் 9500 வரை பேரம் பேசுகிறதா 'ஆதிபுருஷ்' படக்குழு? பகீர் குற்றச்சாட்டு!

எந்த ஒரு சர்ச்சை என்றாலும், வரித்து கட்டிக்கொண்டு முதல் ஆளாக சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுக்கும் பார்த்திபன் இந்த விஷயத்திற்கும் பதிலடி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

click me!