
'மிக்ஜாம்' புயல் காரணமாக இரண்டு நாட்கள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, செங்கல்பட்டு , காஞ்சிபுரை, திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இடைவிடாமல் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தை சரி செய்யும் வேளையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே போல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் போன்றவை ஹெலிகாப்டர் மூலமாகவும் போட் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிதியில் அருவி பட நாயகி அதிதி பாலன்... அதிமுக தொகுதிகள் புறக்கணிக்க படுவது போல் போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிதி பாலன் போட்டுள்ள பதிவில், "நான் திருவாமியூர் ராதாகிருஷ்ணன் நகர் சென்றிருந்தேன். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தண்ணீர் இந்த பகுதிக்கு பாய்ச்சப்பட்டது. அங்கே இறந்த விலங்குகள் மிதந்து கொண்டிருந்தன. 2 குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் மீட்க நாங்கள் தேங்கிய தண்ணீரில் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், செல்வாக்கு மிக்க ஒரு பெண்ணை ஏற்றிச் செல்வதற்காக 6 காவலர்களுடன் படகு ஒன்று கோட்டூர் புரத்தில் உள்ள ரிவர் வியூ சாலையில் சென்றது" என்று குறிப்பிட்டிருந்தார்.
Aamir Khan: வன்முறை தான் படமா? லோகேஷ் கனகராஜ் - நெல்சன் திலீப் குமாரை விமர்சித்த டாப் ஹீரோ!
இதற்கு பதிலளித்த ஒருவரின் பதிவையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், "இங்கு குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து மின்சாரம் இல்லை. குழந்தைகளை காரில் தூங்க வைத்து வீட்டை மேலே மாற்றம் செய்கிறோம்" எனக் கூறியிருந்தார். இந்த பதிவுகள் தான் அதிமுக தொகுதிகளை அரசு கண்டுகொள்ளவில்லையா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. "அதிமுகவின் தொகுதிகளில் வெள்ள நிவாரண வேலைகள் எதுவும் நடைபெறவில்லயா? என்று விசாரித்ததில்... சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளும் தண்ணீரில் மிதந்ததால் பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது உன்னை தான் என்றாலும்.. தற்போது அந்த புகுத்தியில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு, நிவாரண பணிகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.