
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சமூக வலைதளத்தில் பதிவுகளை போட்டு வரும், நடிகை கங்கானாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, 'தாம் தூம்' படத்தில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை, கங்கனா ரணாவத். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்து வரும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசாக தயாராக இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ரிலீஸில் இருந்து பின் வாங்கியது.
எனவே, கொரோனாவின் இரண்டாவது அலை முற்றிலும் சரியாகிய பின், 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்த பிறகே இந்த படம் ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் நேரடியாக கூறி, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் கங்கானாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ட்விட்டரின் விதிமுறைகளை மீறும் விதமாக... வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்து வருவதால் இவரது ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.