Salman Khan: நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

Published : Dec 26, 2021, 02:49 PM IST
Salman Khan: நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி! உடல்நிலை குறித்து வெளியான தகவல்!

சுருக்கம்

நாளைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில்,  நடிகர் சல்மான் கான் (Salman Khan) தன்னைக்கு சொந்தமான பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

நாளைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில்,  நடிகர் சல்மான் கான் தன்னைக்கு சொந்தமான பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில் சால்மன் கானை,  விஷமற்ற பாம்பு தான் கடித்ததாகவும், இதை தொடர்ந்து, உடனடியாக காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பாம்பு சல்மான் கானின் கையில் கண்டித்துள்ளது. விஷமற்ற பாம்பு என்ற போதிலும், அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு, சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு அவர் டிஸ்சாஜ் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: Ajith about Nerkonda Paarvai: 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தது ஏன்? அஜித் சொன்ன வேற லெவல் பதில்!

 

நாளைய தினம் சல்மான் கான் தனது பிறந்தநாளை ஆடம்பரமான பன்வெல் பண்ணை வீட்டில் கொண்டாட திட்டமிட்டிருந்தார். கடந்த சில வருடங்களாகவே... இங்கு தான் அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் அதிகாலையில் இருந்தே நடந்து வந்துள்ளது.  மேலும் சல்மான் கானுக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள இருந்தனர். தோட்ட பகுதியில் அதற்கான பணியில் சல்மான் காணும் ஈடுபட்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்: Vanitha: என்ன கொடுமை? பச்சை லிப்ஸ்டிக் போட்டு பயமுறுத்தும் வனிதா.. பங்கமா கலாய்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

 

சம்லான் கானின் மிகவும் ஃபேவரட் இடமாக இந்த பன்வெல் பண்ணை வீடு இருந்து வருகிறது.  கடந்த ஆண்டு லாக்டவுனின் பெரும் பகுதியை, சல்மான் கான் இந்த பண்ணை வீட்டில் தான் செலவழைத்தார். அவர் பண்ணையில் வேலை செய்வது மற்றும் செடிகள் நடுவது போன்ற பல வீடியோ மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல்  கடந்த ஆண்டு சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் ஒரு பாடலை படமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Rashmika: இருட்டு அறையில்.. கருப்பு சேலையில் முரட்டு போஸ்! டல்லான வெளிச்சத்தில் டாலடிக்கும் அழகில் ராஷ்மிகா!

 

அவருக்கு மிகவும் பிடித்த இடமான இந்த பண்ணை வீட்டில், அதுவும் அவரது பிறந்தநாள் பார்ட்டி இன்று கொண்டாட இருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலர், சமூக வலைத்தளம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?