நடிகர் கார்த்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

Published : Apr 06, 2021, 08:26 AM IST
நடிகர் கார்த்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

சுருக்கம்

சமீபத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், நலமடைந்த கார்த்தி தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சமீபத்தில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின், நலமடைந்த கார்த்தி தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் கார்த்திக் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று திங்கட்கிழமை மாலை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கடந்த மாதம் 21ஆம் தேதி மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்,  சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் வீடு திரும்பினார்.

மருத்துவர்கள் அவர் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்கும்படி கூறியிருந்தனர். ஆனால் டாக்டர்களின் எச்சரிக்கையையும் மீறி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதிமுக மற்றும் அதன்  கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம், போன்ற தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். பிரச்சாரத்திற்கு பின் சென்னை திரும்பிய கார்த்திக்கு நேற்று மாலை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது குறைந்தது மூன்று வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் அரசியல் தலைவர்கள், திரையுலகினர், மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!