அதன் பலனாக சுல்தான் திரைப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது
ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். கைதி படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள இந்த படத்தையும் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா முதன் முறையாக தமிழில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், எடிட்டராக ரூபன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
undefined
கடந்த அக்டோபர் மாதமே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த போதும், கொரோனா பிரச்சனை காரணமாக படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் பொங்கலுக்கு வெளியாக இருந்த படத்திற்கு போட்டியாக மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் களமிறங்கியதால் ரிலீஸ் தள்ளிப்போனது. தியேட்டர்கள் பிரச்சனை காரணமாக படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின நிலையில், ஏப்ரல் 2ம் தேதி தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இடையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் சுல்தான் பட ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக சொன்னபடி ஏப்ரல் 2ம் தேதி தியேட்டர்களில் படம் வெளியானது. சுல்தான் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே யூ-டியூப்பில் மூவி ரிவ்யூ செய்பவர்களின் அட்ராசிட்டி அதிகரித்தது. தேவையில்லாமல் கமெண்ட்களை கொடுத்து படத்தின் வரவேற்பை குறைக்க பார்ப்பதாக தயாரிப்பாளர் முதல் கார்த்தி ரசிகர்கள் வரை சோசியல் மீடியாவில் சீறினர்.
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தியேட்டர்களை பெண்கள், குழந்தைகளின் கூட்டம் ஆக்கிரமிக்க ஆரம்பித்தது. அதன் பலனாக சுல்தான் திரைப்படம் திரைக்கு வந்த 3 நாட்களில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 15 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உலக அளவில் 25 கோடி வசூலை தாண்டி விட்டதாம். இந்த செய்தியால கார்த்தி ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.