
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் நடந்ததையும் அதில் பலர் இந்த வாரம் ஆரி கேப்டன்சி பதவிக்கு தேர்வானதால் அவரை நாமினேட் செய்ய முடியாமல் நேரடியாகவே வாய் விட்டு புலம்புவதையும் பார்த்தோம். அதே போல், ரம்யா, ஷிவானி, கேப்ரில்லா என பலர் ஆஜித்துக்கு ஈடுபாடு குறைவாக உள்ளது என மாறி மாறி நாமினேட் செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், ஆரி மீது உள்ள கடுப்பை ரம்யாவும் - ஷிவானியும் வெளிக்காட்டியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... "ரம்யா ஆரி எப்போதுமே கரெக்டாக இருக்க வேண்டும் என செய்கிறார். இது மக்களுக்கு பிடிக்குதா ? என்கிற சந்தேகம் தனக்கு வந்து விட்டதாக கூறுகிறார்.
பின்னர் எந்த விதத்திலும் பிடித்திருக்கும் என தனக்கு தோன்றவில்லை என ரம்யா கூறியபின்னர், ஷிவானி சில விஷயங்களை சரியாக கூறினாலும், சில நேரத்தில் அவரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மற்றவர்களை கோத்து விடுவதுபோல் தோன்றுவதாக தெரிவிக்கிறார். இதைத்தொடர்ந்து பேசும் ரம்யா ஆரி கிடைக்கும் கேப்பில் எல்லாம் தன்னுடைய பிளஸ் பற்றியும் மற்றவர்கள் மைனஸ் பற்றியும் கூறுவதாக தனக்கு தோன்றுவதாக கூறுகிறார். ஷிவானியும் ரம்யாவுக்கு ஒட்டு ஊதுகிறார். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.