வெற்றி பெரும் வாய்ப்பை இழந்து முதல் ஆளாக வெளியேறியது யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published : Oct 06, 2019, 07:58 PM IST
வெற்றி பெரும் வாய்ப்பை இழந்து முதல் ஆளாக வெளியேறியது யார் தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சுருக்கம்

தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என முடிவு எடுக்க முடியாத அளவிற்கு, மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் இருந்து வந்தாலும். இந்த பிரபலம் வெற்றியாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என ஓவவொருவருக்கும் ஒரு ஆசை உள்ளது.

தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என முடிவு எடுக்க முடியாத அளவிற்கு, மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் இருந்து வந்தாலும். இந்த பிரபலம் வெற்றியாளராக இருந்தால் நன்றாக இருக்கும் என ஓவவொருவருக்கும் ஒரு ஆசை உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே, தன்னுடைய நகைச்சுவை பேச்சால், அனைவர் மனதையும் கவர்ந்த சாண்டி வெற்றி பெறுவாரா, அல்லது சைலண்டாக இருந்து நடுநிலையாக விளையாடும் முகேன் வெற்றி பெறுவாரா என்கிற பேச்சுக்களும் நிறைய விவாதிக்கப்படுகிறது.

ஆண்களுக்கு பெண்களும் குறைந்தவர்கள் இல்லை என, இவர்கள் இருவருக்கு போட்டியாக உள்ளே உள்ள லாஸ்லியா வெற்றி கோப்பையை கை பற்றவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதே போல் ஷெரீனுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வெற்றி கோப்பையை, இதனை நாள் பல்வேறு சவால்கள், கடுமையான டாஸ்குகளை கடந்து உள்ளே இருக்கும் அனைவரும் கையில் ஏந்தி அழகு பார்க்க வேண்டும் என தெரிவித்து, கமல் கடந்த சீசனில் வெற்றி பெற்ற ரித்விகாவிடம் கோப்பையை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார்.

உள்ளே சென்ற ரித்விகா, நான்கு போட்டியாளர்களுடன் ஆட்டம் பாட்டம் என பதற்றத்தில் உள்ள இறுதி போட்டியாளர்களை, கூல் செய்தார். பின் அகம் டிவி வழியாக ரித்விக்கவிடம் பேசும் கமல், ஒரு கையில் பிக்பாஸ் கோப்பையையும் மறு கையில், முதலாவதாக வெளியேற உள்ள போட்டியாளரின் பெயரையும் காட்டுகிறார்.

கமல் காட்டிய அந்த அட்டையில் நடிகை ஷெரினின் பெயர் எழுதப்பட்டிருந்தது. எந்த வித கவலையும் இன்றி, ஷெரின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் இது ஷெரின் பிக்பாஸ் டைட்டல் வின்னராக ஆக வேண்டும் என ஆசை பட்ட ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!