
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வனிதா ஷெரினிடம் நடந்து கொள்ளும் விதம், மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்துவது போலவே உள்ளது. நட்பாக பழகி வந்த ஷெரின் - தர்ஷன் இடையே அப்பேர், உள்ளது என வீண் பழி போட்டார் வனிதா. இதுகுறித்த பிரச்சனை இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தெரிந்தது.
அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், வனிதா சொன்ன வார்த்தையை தாங்கி கொள்ள முடியாமல், கதறி அழுகிறார் ஷெரின்.
அழுது கொண்டிருக்கும் ஷெரினை சேரன் சமாதானம் செய்கிறார். அப்போது இனி நான், தர்ஷனிடமும் பேச போவது இல்லை. வனிதாவிடமும் பேசபோவது இல்லை, என தன்னுடைய அதிரடி முடிவை கூறுகிறார். மேலும் யார் இப்படி சொல்லி இருந்தாலும் பரவாயில்லை தன்னுடைய தோழி இப்படி சொன்னது மிகவும் வேதனையாக உள்ளது என கூறும் காட்சிகள் இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் விளையாடிவரும் ஷெரின் மீது மக்கள் நிறைய அன்பு வைத்திருக்கும் நிலையில், வனிதா இவர் மீது வீண் பழி சுமாற்றியுள்ளது, வனிதா இந்த நிகழ்ச்சியில் தொடர முடியாத அளவிற்கு சிக்கலாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.