Cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் விருது வென்று கெத்து காட்டிய இந்தியருக்கு குவியும் வாழ்த்துக்கள்

By Asianet Tamil cinema  |  First Published May 29, 2022, 11:00 AM IST

Cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் விருது வென்ற ஷானக் சென் என்கிற இந்தியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஆண்டுதோறும் பிரான்ஸில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 75-வது கேன்ஸ் பட விழா கடந்த மே 17-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் திரையிடப்பட்டன. அந்தவகையில் பார்த்திபன் இயக்கிய சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் இதில் திரையிடப்பட்டு உலக சினிமா நட்சத்திரங்களின் பாராட்டுக்களை பெற்றது. இந்த திரைப்பட விழாவில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பார்த்திபன், பூஜா ஹெக்டே, தீபிகா படுகோனே, தமன்னா என ஏராளமான இந்திய திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், கேன்ஸ் பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு நாளில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் இந்தியாவைச் சேர்ந்த ஷானக் சென் இயக்கிய 2 'All That Breathes' என்கிற படம் சிறந்த ஆவணப்படத்திற்கான கோல்டன் ஐ விருதை தட்டிச் சென்றது. 

டெல்லி நகரின் மாசடைந்த காற்று மற்றும் சீரழிந்து வரும் சமூக கட்டமைப்புக்கு மத்தியில் நாடு கடந்து வரும் பருந்துகளைக் காப்பாற்றும் இரு சகோதரர்களைப் பற்றி இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது. கேன்ஸ் பட விழாவில் விருது வென்ற ஷானக் சென்னுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படியுங்கள்... Vikram : யம்மாடியோ கமலின் ‘விக்ரம்’ இத்தனை தியேட்டர்களில் ரிலீசாகிறதா..! என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது

click me!