
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படிப்பில் சற்று பின்தங்கிய மாணவர் தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்து பரவலாக கூறி வருகின்றனர்.
இந்தியாவை அடையாளப்படுத்தி பல்வேறு சர்வதேச புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றும் ஷாருக்கான் பள்ளிப்படிப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்றிருக்கிறார் என்பதற்கு சான்றாக.
டெல்லி பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் ஹான்ஸ் ராஜ் கல்லூரியில் சேருவதற்காக நடிகர் ஷாருக்கான் சமர்ப்பித்த 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை, டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கி வரும் 'டியூ டைம்ஸ்' எனும் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தற்போது நடிகர் ஷாருக்கானின் மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், அவர் மற்ற பாடப்பிரிவுகளை விட ஆங்கிலத்தில் 51/100 என குறைவான மதிப்பெண்களே எடுத்துள்ளார்.
ஆங்கில பேச்சில் புலமையான அவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.