அஜித்தின் 'நேர்கொண்ட பார்வைக்காக' ஆளே மாறிப்போனே ஸ்ரத்தா ஸ்ரீநாத்'! இப்படி ஆகிட்டாங்களே?

Published : Mar 23, 2019, 05:23 PM IST
அஜித்தின் 'நேர்கொண்ட பார்வைக்காக'  ஆளே மாறிப்போனே ஸ்ரத்தா ஸ்ரீநாத்'! இப்படி ஆகிட்டாங்களே?

சுருக்கம்

தல அஜித் தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.  

தல அஜித் தற்போது பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டு வரும் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.

இந்த படத்தை, சதுரங்க வேட்டை,  தீரன் அதிகாரம் ஒன்று, என வித்தியாசமான கதைகளை இயக்கி, வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இடைவிடாமல் நடந்து வருகிறது. சமீபத்தில் நடிகை வித்யா பாலன் மற்றும் அஜித் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், நடித்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை டாப்சி நடித்த அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்த படத்திற்காக தன்னுடைய டோடல் கெட்டப்பையே மாற்றி நடித்துள்ளார். 

தற்போது ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு புது லுக்கில் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை போட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் இந்த கெட்டப்பில் தான் நடிக்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Poonam Bajwa : 40 வயசு மாதிரியே இல்ல.. கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா போட்டோஸ்...!
Rukmini Vasanth : தங்கப்பூவே!! இதயத்தை திருடும் ருக்மிணி வசந்த் அழகிய கிளிக்ஸ்