Shankar | பல கோடி ரூபாய்க்கு விற்றுப்போன ஷங்கர் மூவி ? முதல் படத்திலேயே இவ்வளவு லாபமா !!

By Kanmani PFirst Published Nov 24, 2021, 1:28 PM IST
Highlights

Shankar | ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ராம் சரணின் படம் ரூ.300 கோடிக்கு மேல் விலை போனதாக தகவல் கசிந்துள்ளது.
 

இந்தியன், ஜெண்டில் மேன், முதல்வன், அந்நியன், ஐ, எந்திரன் என சூப்பர் ஹிட் படங்களை தமிழக ரசிகர்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியை ருசித்துள்ளது.  தற்போது கமலின் இந்தியன் 2 படத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் ஷங்கர்.

இவர் தமிழ் தவிர அனில் கபூர் நடித்த நாயக் என்னும் படத்தை ஹிந்தியில் இயக்கியிருந்தார். இதைதொடரந்து தெலுங்கு திரையுலகிற்குள் நுழைந்துள்ள ஷங்கர்  பிரபல நடிகர் ராம் சரணின் 15 வது படத்தை இயக்கி வருகிறார்.  கியாரா அத்வானி, அஞ்சலி, ரகுமான் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு புனேவில் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது  இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் திரையிடும் வகையில் உருவாக்கப்படும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தமன் - இயக்குனர் ஷங்கர் கூட்டணி இதுவே முதல் முறையாகும். RC 15 படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின்  அனைத்து மொழிகளுக்கான திரையரங்கு, சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை 350 கோடிகளுக்கு  ZEE ஸ்டுடியோஸ் வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஷங்கர் படங்கள் என்றாலே பிரமாண்டம் தான். அந்த வகையில் தற்போது உருவாக்கி வரும் ராம் சரண் நடிக்கும் படமும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படுவதாகவும், இந்த படத்தின் வெளியீட்டு உரிமம் மூலம் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  

click me!