Grammy Awards 2022 | 64 வது கிராமி விருது ; 11 பிரிவுகளில் இடம் பிடித்த அமெரிக்க இசையமைப்பாளர் ஜான் பாடிஸ்ட்!!

Kanmani P   | Asianet News
Published : Nov 24, 2021, 11:48 AM ISTUpdated : Nov 24, 2021, 11:50 AM IST
Grammy Awards 2022 | 64 வது கிராமி விருது ; 11 பிரிவுகளில் இடம் பிடித்த அமெரிக்க இசையமைப்பாளர் ஜான் பாடிஸ்ட்!!

சுருக்கம்

Grammy Awards 2022 | 64 வது கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ரெக்கார்டிங் அகாடமி.

அமெரிக்க இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை அங்கீகரிப்பதற்காக ரெக்கார்டிங் அகாடமியால் ஒவ்வொரு வருடமும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2022 இல் நடைபெறும் 64 வது வருடாந்திர கிராமி விருதுகளுக்காக  பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.  முதல் முறையாக ஒவ்வொரு பொதுப் பிரிவுகளிலும் 10 பிரபலங்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் இசை சாதனை, புதிய ஆல்பம்,  பாடல் மற்றும் சிறந்த புதிய கலைஞர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விருது வழங்கப்படுகிறது.. 

இந்த ஆண்டிற்கான சிறந்த பரிந்துரைக்கப்பட்டவர்களில் 11 பரிந்துரைகளுடன் அமெரிக்க இசையமைப்பாளர் ஜான் பாடிஸ்ட் உள்ளார். அதைத் தொடர்ந்து ஜஸ்டின் பீபர், டோஜா கேட் மற்றும் எச்.இ.ஆர். ஆகியோர் தலா எட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்து பில்லி எலிஷ் மற்றும் ஒலிவியா ரோட்ரிகோ ஆகியோர் தலா 7 தலைப்புகளுக்கு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் டெய்லர் ஸ்விஃப்ட், கன்யே வெஸ்ட், டோனி பென்னட் மற்றும் லேடி காகா மற்றும் லில் நாஸ் எக்ஸ் ஆகியோர் அதிக விருது பெரும் பிரபலங்கள் பட்டியலில்  இணைந்துள்ளனர்.

 கிராமி விருதுக்கான பரிந்துரை பட்டியலை ரெக்கார்டிங் அகாடமி வெளியிட்டுள்ளது. அதில்....

இந்த ஆண்டுக்கான இசை சாதனை :

ABBA  பாப் குரூப், ஜான் பாடிஸ்ட், டோனி பென்னட் மற்றும் லேடி காகா,ஜஸ்டின் பீபர், பில்லி எலிஷ், லில் நாஸ் எக்ஸ், ஒலிவியா ரோட்ரிகோ, சில்க் சோனிக் உள்ளிட்டோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த ஆல்பம் :

ஜான் பாடிஸ்ட் , ஜஸ்டின் பீபர், டோஜா கேட் , பில்லி எலிஷ், லேடி காகா மற்றும் டோனி பென்னட் - ஹெச்.ஈ.ஆர், லில் நாஸ் எக்ஸ், ஒலிவியா ரோட்ரிகோ,  டெய்லர் ஸ்விஃப்ட் ,  கன்யே வெஸ்ட் 

சிறந்த பாடல் : 

எட் ஷீரன்,  அலிசியா கீஸ், ஒலிவியா ரோட்ரிகோ , எச்.இ.ஆர், பில்லி எலிஷ் , டோஜா கேட் ,சில்க் சோனி, லில் நாஸ் எக்ஸ், ஜஸ்டின் பீபர், பிராண்டி கார்லைல்.

 சிறந்த புதிய கலைஞர்:
அரோஜ் அஃப்தாப் , பேபி கீம்,  லரோய் ஆர்லோ பார்க், ஒலிவியா ரோட்ரிகோ.

சிறந்த நடனம் / மின்னணு பதிவு:

அஃப்ரோஜாக் மற்றும் டேவிட் குட்டா, ஓலாஃபர் அர்னால்ட்ஸ், ஜேம்ஸ் பிளேக், கரிபோ, ஆலிவ்  டைஸ்டோ.

சிறந்த நடனம் / மின்னணு ஆல்பம்:

பிளாக் காபி, இல்லெனியம்,மேஜர் லேசர், மார்ஷ்மெல்லோ , சில்வன் எஸ்ஸோ, டென் சிட்டி.

சிறந்த ராப் ஆல்பம்:

ஜே. கோல், டிரேக், நாஸ், டைலர், கன்யே வெஸ்ட்.

சிறந்த ராப் பாடல்:

DMX , Saweetie , பேபி கீம், கோல்

சிறந்த ராப் செயல்திறன்:

பேபி கீம், கார்டி பி, கோல், டிரேக், மேகன் தி ஸ்டாலியன்.

சிறந்த மெலோடிக் ராப் செயல்திறன்:

ஜே. கோல் , டோஜா கேட், லில் நாஸ் எக்ஸ், டைலர் தி கிரியேட்டர், கன்யே வெஸ்ட்.

சிறந்த தயாரிப்பாளர்: 

ஜாக் அன்டோனாஃப்,  ரோஜெட் சாஹேட், மைக் எலிசாண்டோ, ரிக்கி ரீட்.

இது போன்ற இசை சார்ந்த அனைத்து பிரிவினருக்கும் விருது வழங்குவதற்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த வருட ஜனவரி 31-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!