Gouri kishan | Anagha: சந்தானம் பட ஹீரோயினுடன் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள '96' கௌரி கிஷன்! வைரல் வீடியோ!

Published : Nov 24, 2021, 11:07 AM ISTUpdated : Nov 24, 2021, 11:21 AM IST
Gouri kishan | Anagha: சந்தானம் பட ஹீரோயினுடன் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள '96' கௌரி கிஷன்! வைரல் வீடியோ!

சுருக்கம்

இதுவரை எந்த ஒரு சர்ச்சை கதாபாத்திரத்திலும் நடித்திராத கௌரி கிஷன் (Guri Kishan) முதல் முறையாக ஆல்பம் பாடல் ஒன்றில், சந்தானம் பட ஹீரோயினுடன் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். 'மகிழினி' (Magizhini Album Song) என பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆல்பம் பாடல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

Gouri kishan | Anagha: சந்தானம் பட ஹீரோயினுடன் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள '96' கௌரி கிஷன்! வைரல் வீடியோ!

இதுவரை எந்த ஒரு சர்ச்சை கதாபாத்திரத்திலும் நடித்திராத கௌரி கிஷன் முதல் முறையாக ஆல்பம் பாடல் ஒன்றில், சந்தானம் பட ஹீரோயினுடன் ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ளார். 'மகிழினி' என பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆல்பம் பாடல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான, 96 படத்தில் த்ரிஷாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்து, ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதிந்தவர் கௌரி கிஷன். அதே போல் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிக்கிலோனா' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த அனகாவும் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் இந்த ஆல்பம் பாடலில், நடித்துள்ளார்.  இந்த பாடல் வெளியான இரண்டு நாட்களுக்கு பின்னர் தற்போது நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இப்பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.

சற்றும் முகம் சுழிக்காத வாறு, இப்பாடலின் ஒவ்வொரு காட்சிகளும் அமைத்துள்ளது. அதே போல் பல நடிகைகள் நடிக்க தயங்கும் சர்ச்சையான கதாபாத்திரத்தில் இருவரும் நடித்துள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 'மகிழினி'  இசை ஆல்பத்தை சரிகமா ஒரிஜினல் வெளியிட்டிருக்கிறார்கள்.
இது குறித்து இந்த பாடலின் இயக்குனர் லசுப்பிரமணியன் கூறியிருப்பது, LGBT என்று அழைக்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றி நம்முடைய சமுதாயத்தில் புரியாத பல விஷயங்களை இந்த படத்தில் கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த கௌரி கிஷனும், டில்லியில் இருந்து வரும் அனகாவும் ஒரே இடத்தில் பரதநாட்டியம் கற்று கொள்கிறார்கள். இருவருமே அவர்களுடைய பெற்றோருக்கு ஒரே மகள்கள். இவர்களுக்குள் எப்படி திடீர் என காதல் வளர்கிறது, என்பதை முகம் சுழிக்காத வாறு வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர். இவர்கள் விஷயம் பெற்றோருக்கு தெரியவர அதனை அவர்கள் ஏற்கிறார்களா? இல்லையா? என்பதையும் இந்த பாடம் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இருவருக்குமே இந்த ஆல்பம் குறித்து முழுமையாக விளக்கி தெளிவு படுத்தியபின்னரே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் நினைத்ததை விட இந்த ஆல்பம் பாடல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கியின் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வரும் வீடியோ இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்