
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸின் முதல் சீசனின் மொத்த பரபரப்புக்கும் காரணமானவர் ஓவியா-ஆரவ் தான். இவர்களின் காதல், தற்கொலை முயற்சி, மருத்துவ முத்தம் என மொத்த எபிசோடுகளும் விறுவிறுப்பாக இருந்தது. அந்த சீசனில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்களும் ஆரவ் - ஓவியாவும் தான். இவர்களுக்கென தன ஆர்மியே உருவானது.
காதல் தோல்வி காரணமாக தற்கொலை முயற்சி செய்ததால் ஓவியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து முதல் சீசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஆரவ் இந்த வெற்றிக்கு பிறகு பட நயகனாக ராஜபீமா , மார்க்கெட் ராஜா எம்.பி.பி.ஸ், சைத்தான், ஓகே கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் இருந்து வெளியே வந்த பிறகு தான் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தார் ஆரவ். இதை தொடர்ந்து ஓவியா, ஆரவ் இருவருமே படப்பிடிப்புகளில் பிஸியாகி விட்டனர்.
பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ராஹேன் என்பவரைஆரவ் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து அண்மையில் ராஹேனுக்கு சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்த படங்கள் போதிய வெற்றியை பெற்று தரவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் இன்று ஆரவ் தந்தையான நற்செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட ஆரவ் ஆண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளதாகவும். தாயும் சேயும் நலம் உங்களது அன்பும் ஆசிர்வாதமும் அவர்களுக்கு வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.