
எந்திரன் 2.0 படப்பிடிப்பில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு இயக்குநர் ஷங்கர் பகிரங்கமாக மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கிடையே திருவல்லிக்கேணியில் இப்படத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது நாளிதழ் ஒன்றின் புகைப்பட செய்தியாளர் ஒருவர் அக்காட்சிகளை படமாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த திரைப்பட தயாரிப்புக் குழு, அப்பத்திரிகையாளரை தாக்கினர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 2.0 பட இயக்குநர் பப்பு என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ஷங்கரின் உறவினர் என்றும் கூறப்படுகிறது..
இதற்கிடையே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இயக்குநர் ஷங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நிகழ்ந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட போது தாம் அங்கு இல்லை என்றும், இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் செயல்படுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரினை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.