ராம் சரண் படத்தை துவங்க நாள் குறித்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்!! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

By manimegalai aFirst Published Sep 5, 2021, 5:28 PM IST
Highlights

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு ஆர்வமாக தேர்வு செய்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு இயக்குனர் நாள் குறித்து விட்டார். இதுகுறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தின் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை படக்குழு ஆர்வமாக தேர்வு செய்து வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு இயக்குனர் நாள் குறித்து விட்டார். இதுகுறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படம், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். தங்களுடைய படத்தை முடித்த பின்பு தான் மற்ற படங்களை இயக்க வேண்டும் என லைகா நிறுவனம், வழக்கு முதல்கொண்டும் போட்டு பார்த்தும், ஷங்கர் தன் தரப்பு நியாத்தை கூறி விட்டு, அடுத்த படத்தை இயக்குவதில் உறுதியாக இருந்தார்.

சமீபத்தில் இந்த பிரச்சனை லைகா நிறுவனர், சுபாஷ்காரனை சந்தித்து பேசியதன் மூலம் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இம்முறை தமிழ் பட ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார். 

ராம் சரண் நடித்து வந்த ஆச்சார்யா, மற்றும் RRR படங்களின் படப்பிடிப்பது முழுமையாக முடித்து விட்டு, விரைவிலேயே ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்னதான பணிகள் துரிதமாக நடந்து வம்டா நிலையில், தற்போது இந்த படத்தை துவங்குவதற்கான நாள் குறித்து விட்டார் ஷங்கர். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், செப்டம்பர் 8 ஆம் தேதி அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கி நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவலைகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என்றும், இந்த படத்தில்... தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி நடிப்பதும் உறுதியாகி உள்ளது. அதே போல் சமீபத்தில் நடிகை அஞ்சலி இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!