
சிம்புவும் சர்ச்சைகளும் பிரித்துப்பார்க்க முடியாதவை எனும் நிலையில் தற்போது பிக்பாஸ் பிரபலம் தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டியுடன் அவர் நெருக்கமாக உள்ள படங்கள் வைராகிவருகின்றன.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். மேலும், இவருக்கு ப்ளேபாய் என்றும் தமிழ் சினிமாவில் ஒரு செல்லப் பெயரும் இருக்கிறது. நயன்தாரா தொடங்கி செல்லப் பல்வேறு காதல் கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார். அதேபோல சிம்பு நண்பர்களுடனும் அடிக்கடிபார்ட்டிக்கு செல்வது வழக்கம். மேலும், இவர் கடந்த பிக் பாஸ் சீசனின்போது யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் வைரலாக பரவியது.
இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ள தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டியுடன் நடிகர் சிம்பு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சீசனில் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா மூலம் சிம்புவிற்கு பரிட்சயமான என்பது அறிந்த ஒன்று தான்., ஆனால்,சனம் ஷெட்டிக்கும் சிம்புவுக்கும் என்ன தொடர்பு என்று தான் தெரியவில்லை.
தர்ஷனின் காதலியான ஷணம் ஷெட்டியும் ஒரு மாடல் தான். இவர், தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட பார்வையாளராகள் வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி, விலாசம், கதம் கதம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவரும் ஒரு மாடல் தான். 2016 ஆம் ஆண்டு மீரா மிதுன் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி, சிம்பு குறித்து பேசுகையில், நான் சமீபத்தில் சிம்புவை ஒரு ஈவண்ட்டில் சந்தித்தேன் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. அந்த சந்திப்பில் தனது பெர்சனலான சில விசயங்களை சிம்பு பகிர்ந்துகொண்டார் என்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.