
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது காதலன் வெளியேற்றப்பட்டது குறித்து அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி நேற்று பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, ‘’டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால், அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் தற்போது சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன். எனவே உங்களது உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என பதிவிட்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்வைத் தரும். அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது. இன்னும் இரு நாட்களில் நான் மீண்டும் சரி ஆகிவிடுவேன். உங்களுடைய பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இது எனக்கு மிகப்பெரிய விஷயம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு. என்னுடைய மருத்துவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் சனம் ஷெட்டி. இதனால் தர்ஷனினி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.