
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த சில நாள்களாக ஓவியாவை வெளியேற்ற பிக் பாஸ் குடும்பத்தினரும் செய்யும் காரியங்கள், அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது இதற்க்கு முன் பரணியை வெளியேற்ற அவர்கள் செய்த காரியத்தை இப்போது ஓவியா விஷயத்திலும் ஃபாலே செய்வதை ஒட்டுமொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் களவாடியுள்ளார் ஓவியா.
நேற்றய நிகழ்ச்சியில் நமீதா, காயத்ரி, ஜுலி போன்றவர்கள் ஓவியாவை நடத்திய விதம் பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
15 போட்டியாளர்களில் தற்போது 10 பேர் மட்டுமே மீதம் உள்ளனர் அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்பதையே மையமாக வைத்து டி.ஆர்.பியை எகிறவைக்கும் கூட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.
பேரணியை ஒதுக்கித்தள்ளியதைப்போலவே ஓவியாவையும் பிக் பாஸில் இருந்து விரட்டுவதற்கு சதி செய்தாலும், மக்கள் மத்தியில் ஓவியாவுக்கான ஆதரவு வலுத்து வருகிறது. இதுகுறித்து, ட்விட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாக நடிகர் நடிகைகள் தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஓவியா யாரையும் மதிப்பதில்லை, எந்த வேலையும் செய்வதில்லை என்று நமீதாவும், காயத்ரியும் குறை சொல்கிறார்கள். இதனால் நடிகை ஓவியாவை ஓரம்கட்டி வெளியேற்ற காயத்ரி, நமீதா உள்ளிட்டவர்கள் அதற்கான முயற்சியில் ஈடுபடுவதோடு ஓவியா மீது அனைவரும் செம கடிப்பில் இருக்கிறார்கள்.
மேலும் இன்றைய புரோமோவில் ஓவியாவுடன் ஏதோ காரணத்திற்காக சண்டை போடுகிறார் சக போட்டியாளரான சக்தி. ஓவியாவின் கேரட்டரே சரி இல்லை என கூறி வரும் சக்தி, "தப்பெல்லாம் பண்ணிட்டு எதுவும் பண்ணாததுபோல் இருந்தா, ஓங்கி.. அறஞ்சிடுவேன் என சொல்ல, "எங்க அறைங்க பாப்போம்" என் சக்தியின் எதிரில் தில்லாக நிற்கிறார் ஓவியா". மற்ற போட்டியாளர்கள் பதட்டத்தில் வந்து தடுக்க, இதனால் பிக் பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிறது. எதற்காக இப்படி நடக்கிறார் சக்தி என்பதை வரும் இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரியும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.